பொது செய்தி

தமிழ்நாடு

போரூர் ஏரியில் மீண்டும் ப்பை அகற்றும் பணி நிறுத்தம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
போரூர் : போரூர் ஏரியில் குப்பை அகற்றும் பணி, மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக போரூர் ஏரி உள்ளது. சமூக விரோதிகளால் இங்கு மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இது குறித்து, நம் நாளிதழில் ஜூலை மாதம் செய்தி வெளியானது.அமைச்சர்

போரூர் : போரூர் ஏரியில் குப்பை அகற்றும் பணி, மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக போரூர் ஏரி உள்ளது. சமூக விரோதிகளால் இங்கு மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இது குறித்து, நம் நாளிதழில் ஜூலை மாதம் செய்தி வெளியானது.அமைச்சர் உறுதிஇதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 'குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு, ஏரியை ஆழப்படுத்தி கரை அமைக்கப்படும்' என, அமைச்சர் உறுதியளித்தார்.இதையடுத்து, ஏரியில் உள்ள குப்பை கழிவுகள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுங்கையூரில் உள்ள சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மாநகராட்சிக்கு, முன்பணமாக, 6.3 லட்சம் ரூபாய் கட்டப்பட்டது. ஜூலை, 20ம் தேதி முதல் இரண்டு லாரிகள் வாயிலாக, குப்பை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

மாநகராட்சியில் கட்டிய முன் பணத்திற்கு ஈடாக, கொடுங்கையூரில் குப்பை கொட்டப்பட்டதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம், ஐந்து நாட்கள் பணி தடைபட்டது.கோரிக்கைபின், மாநகராட்சியில் மீண்டும், 6.8 லட்சம் ரூபாய் கட்டிய நிலையில், மீண்டும் குப்பை கொட்டும் பணி தொடர்ந்தது.இந்நிலையில், மீண்டும், 10 நாட்களுக்கு மேலாக, போரூர் ஏரியில் இருந்து குப்பை அகற்றும் பணி தடைபட்டுள்ளது.ஏரியில் குப்பை கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு, ஆழப்படுத்தி கரை அமைக்கப்படும் வரை, பணிகள் தடைபடாமல் நடக்க, அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை மாநகராட்சிக்கு முறையாக காசோலை கொடுத்து வருகிறோம். ஆனால், தற்போது, அங்குள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.'இதனால், குப்பை கொட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X