மூலக்கொத்தளம் : ரயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல் தேங்கும் கழிவு நீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
சென்னை மூலக்கொத்தளம், சி.பி.சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இப்பகுதியைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.இவ்வழியாக நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த ரயில்வே சுரங்கப்பாதையில், கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், பலமுறை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தொடர்ந்து கழிவு நீர் தேங்கியபடி இருப்பதால், அப்பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. அதனால், விரைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement