பொது செய்தி

இந்தியா

மின்சார மானியம் விட்டுக்கொடுக்க அழைப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
கலபுரகி : ''ஏழை விவசாயிகளின் நலனை கருதி பணக்கார விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் தங்களின் விவசாய பம்ப்செட்களுக்கு பெறும் மின்சார மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்,'' என மின்சாரத்துறை அமைச்சர் சுனில்குமார்வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.கலபுரகியில் அவர் கூறியதாவது:பணக்கார விவசாயிகள், பணக்கார அதிகாரிகள், அரசியல்வாதிகளை, ஏழை விவசாயிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது

கலபுரகி : ''ஏழை விவசாயிகளின் நலனை கருதி பணக்கார விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் தங்களின் விவசாய பம்ப்செட்களுக்கு பெறும் மின்சார மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்,'' என மின்சாரத்துறை அமைச்சர் சுனில்குமார்வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.

கலபுரகியில் அவர் கூறியதாவது:பணக்கார விவசாயிகள், பணக்கார அதிகாரிகள், அரசியல்வாதிகளை, ஏழை விவசாயிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல. எனவே இவர்கள் தங்கள் தோட்டங்கள், விளை நிலங்களின் பம்ப்செட்களுக்கு பெற்றுள்ள மானியத்தை பெரிய மனம் வைத்து விட்டு கொடுக்க வேண்டும்.பணக்காரர்கள் மானிய தொகைக்கு ஆசைப்படாமல் மின் கட்டணம் செலுத்த முன் வர வேண்டும்.

இதனால் கிராமப்புற பகுதியின் ஏழை விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசுக்கு உதவியாக இருக்கும்.விவசாயிகளின் பம்ப்செட்களுக்கு ஏழு மணி நேரம் நிரந்தரமாக மின்சாரம் வினியோகிப்பது அரசின் குறிக்கோளாகும். இதற்கு தகுந்தபடி, 60 இடங்களில், சப் - ஸ்டேஷன் அமைக்கப்படுகிறது. மின் வினியோக நிறுவனங்களுடன், ஆலோசனை நடத்தப்படுகிறது.கிராமப்பகுதிகளில் பழுதடைந்த மின்மாற்றிகளை 24 மணி நேரத்துக்குள் சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X