யாருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாமல் திணறும் ம.ஜ.த.,

Added : செப் 10, 2021
Share
Advertisement
கலபுரகி : நடந்து முடிந்த கலபுரகி மாநகராட்சியில் எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காததால், பா.ஜ., காங்கிரஸ் இரு கட்சிகளுமே ம.ஜ.த.,வின் உதவியை நாடியுள்ளது. யாருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாமல் ம.ஜ.த., திணறுகிறது.கலபுரகி மாநகராட்சிக்கு கடந்த 3ல் ஓட்டுப்பதிவு நடந்தது. பதிவான ஓட்டுகள் கடந்த 6 ல் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள, 55 வார்டுகளில், காங்கிரஸ் - 27, பா.ஜ., - 23, ம.ஜ.த., - 4, மற்றவை - 1

கலபுரகி : நடந்து முடிந்த கலபுரகி மாநகராட்சியில் எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காததால், பா.ஜ., காங்கிரஸ் இரு கட்சிகளுமே ம.ஜ.த.,வின் உதவியை நாடியுள்ளது. யாருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாமல் ம.ஜ.த., திணறுகிறது.

கலபுரகி மாநகராட்சிக்கு கடந்த 3ல் ஓட்டுப்பதிவு நடந்தது. பதிவான ஓட்டுகள் கடந்த 6 ல் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள, 55 வார்டுகளில், காங்கிரஸ் - 27, பா.ஜ., - 23, ம.ஜ.த., - 4, மற்றவை - 1 இடங்களில் வென்றனர். ஆட்சி அமைக்க தேவையான, 28 வார்டுகளில் எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை. ம.ஜ.த., ஆதரவு இருந்தால் மட்டுமே பா.ஜ.,வோ, காங்கிரசோ மாநகராட்சியை கைப்பற்ற முடியும்.

இந்நிலையில் மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல், துணை தலைவர் நிர்மல் குமார் சுரானா உட்பட முக்கிய பிரமுகர்கள் கலபுரகியில் முகாமிட்டுள்ளனர்.வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். உள்ளூர் தலைவர்களை சந்தித்து மாநகராட்சியை கைப்பற்ற தந்திரம் வகுக்கின்றனர்.

இதற்கிடையில், கலபுரகியை சொந்த ஊராக கொண்ட, காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே நேற்று பெங்களூரு வந்தார். ஒரிரு நாளில் கலபுரகி செல்லும் அவர், தனது சாணக்கியத்தனத்தின் மூலம் ம.ஜ.த.,வின் ஆதரவை பெற முயற்சிக்கிறார்.ஆனால் ஏற்கனவே முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம், முதல்வர் பசவராஜ் பொம்மை நேரடியாக பேசி, பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே, பசவராஜ் பொம்மை இருவருமே குமாரசாமிக்கு நெருக்கமான தலைவர்கள். யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தெரியாமல் திணறுகிறார். மேலும், புதிதாக வென்ற நான்கு கவுன்சிலர்களை தனி விமானம் மூலம் ராம்நகர் அழைத்து வரப்பட்டு, தனது தோட்டத்து வீட்டில் தங்க வைத்துள்ளார்.அவர்களுக்கு ராஜ விருந்து வழங்கி நன்றாக கவனித்துகொள்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேயர் பதவிக்கு ம.ஜ.த., ஆசைப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X