பொது செய்தி

இந்தியா

'அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும்'

Added : செப் 10, 2021
Share
Advertisement
சித்ரதுர்கா : ''பத்ரா மேலணை திட்டத்தை செயல்படுத்த, பல்வேறு துறைகளின் அதிகாரிகள், நேர்மையாக பணியாற்ற வேண்டும்,'' என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.பத்ரா மேலணை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, சித்ரதுர்கா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.பின் அவர் பேசியதாவது:பத்ரா மேலணை திட்டப்பணிகள் பல

சித்ரதுர்கா : ''பத்ரா மேலணை திட்டத்தை செயல்படுத்த, பல்வேறு துறைகளின் அதிகாரிகள், நேர்மையாக பணியாற்ற வேண்டும்,'' என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

பத்ரா மேலணை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, சித்ரதுர்கா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.பின் அவர் பேசியதாவது:பத்ரா மேலணை திட்டப்பணிகள் பல ஆண்டுகளாக நடக்கிறது. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாறினாலும் திட்டம் மட்டும் முடிவடையவில்லை. அதிகாரிகள் நல்ல முறையில் பணியாற்றினால் மட்டுமே பணிகளை முடிக்க முடியும்.

அதிகாரிகள் பணிக்கு வந்து செல்வதுடன் நின்று விடக்கூடாது. சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக, பணிகளை செய்ய வேண்டும். அக்கறையுடன் பணியாற்ற வேண்டும். அதிகாரிகள் பணிகள் நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.'புளோரைட்' கலந்த தண்ணீர் மக்களுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. கொரோனா பரவ துவங்கிய பின் தண்ணீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிக்கிறது.

நம் உடலின் மீதும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. மக்களின் வாழ்க்கை, நாட்டின் பொருளாதாரம், நீர்ப்பாசனத்துக்கும் தொந்தரவை ஏற்படுத்தியது. துங்கா ஆற்றிலிருந்து, 17.40 டி.எம்.சி., தண்ணீரை எடுத்து, பத்ரா அணையில் நிரப்பும் பணிகளை, அடுத்த மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும். பத்ரா மேலணை திட்டத்துக்காக, மொத்தம் 7,012 ஏக்கர் நிலத்தை, கையகப்படுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே 3,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பத்ரா மேலணை திட்டப்பணிகளுக்கு, இதுவரை 4,800 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில், பணப்பற்றாக்குறை இல்லை. இத்திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X