போதைப்பொருள் வழக்கில், நடிகை அனுஸ்ரீ பெயர் நீக்கம்| Dinamalar

போதைப்பொருள் வழக்கில், நடிகை அனுஸ்ரீ பெயர் நீக்கம்

Added : செப் 10, 2021
Share
பெங்களூரு : ''போதைப்பொருள் வழக்கில், நடிகை அனுஸ்ரீக்கு எதிரான சாட்சி, ஆதாரங்கள் இல்லாததால், வழக்கிலிருந்து அவரது பெயரை நீக்கியதாக, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கூறினார்,'' என, அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.பெங்களூரில் அவர், நேற்று கூறியதாவது:வழக்கு விசாரணையை, இப்படி நடத்துங்கள்; இவரை வழக்கில் சேருங்கள்; இவரை கை விடுங்கள் என, போலீசாரிடம் கூற முடியாது.போதைப்பொருள்

பெங்களூரு : ''போதைப்பொருள் வழக்கில், நடிகை அனுஸ்ரீக்கு எதிரான சாட்சி, ஆதாரங்கள் இல்லாததால், வழக்கிலிருந்து அவரது பெயரை நீக்கியதாக, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கூறினார்,'' என, அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.

பெங்களூரில் அவர், நேற்று கூறியதாவது:வழக்கு விசாரணையை, இப்படி நடத்துங்கள்; இவரை வழக்கில் சேருங்கள்; இவரை கை விடுங்கள் என, போலீசாரிடம் கூற முடியாது.போதைப்பொருள் வழக்கில், போலீசார், யாருடைய நெருக்கடிக்கு பணிந்து, யாருடைய பெயரையும் கைவிடவில்லை. ஒருவேளை இப்படி செய்தால், நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பலாம்.

போதைப்பொருள் வழக்கிலிருந்து, நடிகை அனுஸ்ரீ பெயரை, கை விட்டதன் பின்னணியில், ஏதோ நெருக்கடி உள்ளதாக எனக்கு தோன்றவில்லை. நடிகை அனுஸ்ரீக்கு எதிரான சாட்சி, ஆதாரங்கள் இல்லாததால், வழக்கிலிருந்து அவரது பெயரை கை விட்டதாக, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர், தெளிவுபடுத்தியுள்ளார். ஒவ்வொருவர், ஒவ்வொரு விதமாக பேசுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X