பொது செய்தி

இந்தியா

அக்கடா... துக்கடா... கர்நாடகா !

Added : செப் 10, 2021
Share
Advertisement
மாணவியை கீழே இறக்கிய கண்டக்டர்கொப்பால்: கொப்பால் அருகே உள்ள பெடகேரி கிராமத்தை சேர்ந்தவர் அக்கமகாதேவி, 21. இவர் கொப்பாலில் உள்ள ஸ் ரீகவிசித்தேஸ்வரா கல்லுாரியில், பி.எஸ்சி., இறுதியாண்டு படித்து வருகிறார். அரசு சார்பில் இன்னும் பஸ் பாஸ் வினியோகம் செய்யாததால், பழைய பஸ் பாஸ், கல்லுாரி அடையாள அட்டை, கல்லுாரி சேர்க்கை ரசீது காண்பித்து பயணம் செய்து


மாணவியை கீழே இறக்கிய கண்டக்டர்


கொப்பால்: கொப்பால் அருகே உள்ள பெடகேரி கிராமத்தை சேர்ந்தவர் அக்கமகாதேவி, 21. இவர் கொப்பாலில் உள்ள ஸ் ரீகவிசித்தேஸ்வரா கல்லுாரியில், பி.எஸ்சி., இறுதியாண்டு படித்து வருகிறார். அரசு சார்பில் இன்னும் பஸ் பாஸ் வினியோகம் செய்யாததால், பழைய பஸ் பாஸ், கல்லுாரி அடையாள அட்டை, கல்லுாரி சேர்க்கை ரசீது காண்பித்து பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று கல்லுாரிக்கு செல்லும் போது, கல்லுாரி சேர்க்கை ரசீதை வீட்டிலேயே மறந்து வைத்து வந்து விட்டார். இதனால் கல்லுாரி முடிந்து, கொப்பாலில் இருந்து வீடு திரும்பும் போது கண்டக்டர், பஸ்சில் ஏற்ற மறுத்து விட்டார்.வேண்டுமானால் டிக்கெட் எடுத்து பயணம் செய், ரசீது இல்லாமல் அனுமதிக்க முடியாது என கூறி கீழே இறக்கி விட்டார். அக்கமாதேவி பஸ்சின் முன் போராட்டம் நடத்த முயற்சித்தார். அதற்குள் கண்டக்டருக்கு கண்டனம் தெரிவித்த சக பயணியர், மாணவிக்கு பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணிக்க வைத்தனர்.


இன்னும் திறக்கப்படாத புதிய பஸ் நிலையம்


கொப்பால்: கொப்பால் மாவட்டம், குகனுாரில் புதிய பஸ் நிலையம் கட்டி, ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் குகனுாருக்கு வரும் பஸ்கள் குறிப்பிட்ட இடத்தில் நிற்பதில்லை. தினம் ஒரு இடத்தில் நிற்கிறது; எந்த பஸ், எந்த இடத்தில் நிற்குமோ என தேட வேண்டி உள்ளது.புதிய பஸ் நிலையத்தில் ஏழு கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலம், மாதம் 1.20 லட்சம் ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒரு ஆண்டாக வர வேண்டிய, 13 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வருவாயும் வரவில்லை.புதிய பஸ் நிலையத்தில் பெயர் பலகையும் இல்லை. பஸ் நிலையத்தை திறக்க துணை முதல்வர் லட்சுமண் சவதியிடம் அதிகாரிகள் தேதி கேட்டு வருகின்றனர். அவர் தேதி கொடுக்காததால் திறப்பு விழா தள்ளி கொண்டே செல்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X