கார் மோதி தாய், மகள் பலி

Added : செப் 10, 2021
Share
Advertisement
துமகூரு : துமகூரில், பஸ்சிலிருந்து இறங்கிய போது, வேகமாக வந்த கார் மோதி, தாய், மகள் பலியாகினர்.துமகூரு கல்லம்பெள்ளா கிராமத்தை சேர்ந்த சாரதம்மா, 45, மகள் கவிதா, 20, பணி நிமித்தமாக நேற்று முன்தினம் காலை ஷிராவுக்கு சென்றனர்.பணி முடித்து இரவில் பஸ் மூலம் சொந்த ஊருக்கு வந்தனர். பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும், அதி வேகமாக வந்த கார் ஒன்று, இவர்கள் மீது மோதியது.மோதிய வேகத்துக்கு, 200

துமகூரு : துமகூரில், பஸ்சிலிருந்து இறங்கிய போது, வேகமாக வந்த கார் மோதி, தாய், மகள் பலியாகினர்.

துமகூரு கல்லம்பெள்ளா கிராமத்தை சேர்ந்த சாரதம்மா, 45, மகள் கவிதா, 20, பணி நிமித்தமாக நேற்று முன்தினம் காலை ஷிராவுக்கு சென்றனர்.பணி முடித்து இரவில் பஸ் மூலம் சொந்த ஊருக்கு வந்தனர். பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும், அதி வேகமாக வந்த கார் ஒன்று, இவர்கள் மீது மோதியது.மோதிய வேகத்துக்கு, 200 மீட்டர் துாரம் வரை இழுத்து சென்றது. தாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

படுகாயமடைந்த மகளை, மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விபத்து செய்து விட்டு கார் ஓட்டுனர் தப்பியோடினார். அப்பகுதியினர் உதவியுடன் போலீசார் பின் தொடர்ந்து பிடித்தனர்.கல்லம்பெள்ளா போலீஸ் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X