ஹிந்து அமைப்புகள் போராட்டம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
பெங்களூரு : விநாயகர் சதுர்த்தி கொண்டாட மாநகராட்சி விதித்துள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகளை மாற்றும்படி வலியுறுத்தி ஹிந்து அமைப்புகள், விநாயகர் உற்சவ கமிட்டியினர், மாநகராட்சி அலுவலகம் முன், நேற்று போராட்டம் நடத்தினர். இவர்களின் நெருக்கடிக்கு பணிந்த மாநகராட்சி விதிமுறைகளில் திருத்தம் செய்தது.கொரோனா பரவுவதால் ஐந்து நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக அரசு

பெங்களூரு : விநாயகர் சதுர்த்தி கொண்டாட மாநகராட்சி விதித்துள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகளை மாற்றும்படி வலியுறுத்தி ஹிந்து அமைப்புகள், விநாயகர் உற்சவ கமிட்டியினர், மாநகராட்சி அலுவலகம் முன், நேற்று போராட்டம் நடத்தினர். இவர்களின் நெருக்கடிக்கு பணிந்த மாநகராட்சி விதிமுறைகளில் திருத்தம் செய்தது.

கொரோனா பரவுவதால் ஐந்து நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக அரசு அனுமதியளித்திருந்தது. ஆனால் பெங்களூரு மாநகராட்சி, வெறும் மூன்று நாட்கள் மட்டுமே, பண்டிகை கொண்டாடுவது உட்பட பல கடும் விதிமுறைகளை விதித்தது. இதனால் அதிருப்தியடைந்த ஹிந்து அமைப்பினர், விநாயகர் உற்சவ கமிட்டியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

காலையிலேயே பெங்களூரு மாநகராட்சி அலுவலகம் முன் குவிந்து, மதியம் 1:30 மணிக்குள், விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மாற்றும்படி காலக்கெடு விதித்தனர். இந்த காலக்கெடு முடிந்தும், மாநகராட்சி தலைமை கமிஷனர், விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மாற்றாததால், கோபமடைந்த போராட்டக்காரர்கள், மாநகராட்சி விதிமுறையை மீறி, 5 அடி உயர விநாயகர் சிலைகளை கொண்டு வந்து, மாநகராட்சி அலுவலகம் முன் வைத்து, பட்டாசு வெடித்து கோபத்தை வெளிப்படுத்தினர்.

மாநகராட்சிக்கு எதிராக கோஷமிட்டு, அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மாற்றாவிட்டால், விதிமுறையை மீறி விநாயகர் உற்சவம் நடத்துவதாக எச்சரித்தனர். இறுதியில் போராட்டத்துக்கு பணிந்த மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ரந்தீப் கோரிக்கை வந்தால், வார்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலை அமர்த்த அனுமதி அளிப்பதாக, நம்பிக்கையளித்தார்.அது மட்டுமின்றி மூன்று நாட்கள் மட்டுமே, விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது; சிலையின் உயரம் தொடர்பாக, விதித்திருந்த கட்டுப்பாடுகளையும், மாநகராட்சி திரும்பப்பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X