கபிலா ஆற்றில் கழிவு நீர்

Added : செப் 10, 2021
Share
Advertisement
மைசூரு : வரலாற்று பிரசித்தி பெற்ற நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகிலுள்ள கபிலா ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது. இதை அறிந்தும் கோவில் நிர்வாகத்தினர், நகராட்சி அதிகாரிகள் கண் மூடி அமர்ந்திருப்பதால் பக்தர்கள் கழிவு நீர் கலந்த ஆற்றிலேயே நீராட வேண்டியுள்ளது. மைசூரு நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து

மைசூரு : வரலாற்று பிரசித்தி பெற்ற நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகிலுள்ள கபிலா ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது. இதை அறிந்தும் கோவில் நிர்வாகத்தினர், நகராட்சி அதிகாரிகள் கண் மூடி அமர்ந்திருப்பதால் பக்தர்கள் கழிவு நீர் கலந்த ஆற்றிலேயே நீராட வேண்டியுள்ளது.

மைசூரு நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திங்கள், வெள்ளிக்கிழமைகள், விடுமுறை நாட்களில் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமிக்கு முதல் நாள் இரவு, கோவில் வளாகம், அதன் சுற்றுபகுதிகளில் பக்தர்கள் தங்குவர். அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து கோவில் முன்பகுதியில் உள்ள கபிலா ஆற்றில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இது போன்ற புனிதமான கபிலா ஆற்றில் தற்போது கழிவு நீர் கலந்துள்ளது. சுற்றுப்புற லே - அவுட்டுகள், கழிப்பறைகளின் கழிவு நீர், கபிலா ஆற்றில் கலந்து அசுத்தமாகியுள்ளது.இதை தடுப்பதில் அதிகாரிகளோ, நகராட்சி அதிகாரிகளோ, அக்கறை காண்பிக்கவில்லை. இதனால் அசுத்தமான நீரிலேயே, பக்தர்கள் நீராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. பல ஆண்டுகளாக இது போன்று கழிவு நீர் கலந்து அசுத்தமடைந்த கபிலா ஆற்றை சுத்தப்படுத்துவதுடன் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X