அரசு இல்லத்தை காலி செய்யாத மாஜி அமைச்சர்

Added : செப் 10, 2021
Share
Advertisement
பெங்களூரு : தன் பேச்சு மற்றும் நடவடிக்கையால் அமைச்சர் பதவியை பறி கொடுத்த யோகேஸ்வர், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமென்ற நம்பிக்கையில் அரசு இல்லத்தை காலி செய்யாமல் இருக்கிறார். கர்நாடகாவில், காங்கிரஸ் -- ம.ஜ.த., கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜ., ஆட்சிக்கு வந்த ஆரம்ப நாட்களில் யோகேஸ்வருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மிகவும் போராடி, எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பிடித்தார்.

பெங்களூரு : தன் பேச்சு மற்றும் நடவடிக்கையால் அமைச்சர் பதவியை பறி கொடுத்த யோகேஸ்வர், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமென்ற நம்பிக்கையில் அரசு இல்லத்தை காலி செய்யாமல் இருக்கிறார்.

கர்நாடகாவில், காங்கிரஸ் -- ம.ஜ.த., கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜ., ஆட்சிக்கு வந்த ஆரம்ப நாட்களில் யோகேஸ்வருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மிகவும் போராடி, எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பிடித்தார். ஆனால் பிடித்த துறை கிடைக்காததால், அதிருப்தியடைந்தார். அரசு மற்றும் எடியூரப்பாவுக்கு எதிராக பேசி கட்சி மேலிடத்தின் கோபப்பார்வைக்கு ஆளானார். எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க, பெங்களூருக்கும், டில்லிக்கு நடையாய் நடந்தார்.

அவரது விருப்பப்படியே, முதல்வர் மாற்றம் நடந்தது. பசவராஜ் பொம்மை முதல்வரானார்.எடியூரப்பா மற்றும் அரசுக்கு ஆதரவாக, எதிராக பேசிய, 'லாபி' நடத்திய தலைவர்களை, அமைச்சரவையில் சேர்க்காமல் விலக்கி வைத்தனர். அதில் யோகேஸ்வரும் ஒருவர். எப்படியாவது அமைச்சர் பதவியில் அமர, அதிகபட்சம் முயற்சிக்கிறார். அமைச்சர் பதவி, விரும்பிய துறை கிடைக்குமென்ற நம்பிக்கையில், அரசு பங்களாவை இன்னும் காலி செய்யவில்லை.

அமைச்சரான பின், அரசு இல்லத்துக்கு பரிதவிக்க வேண்டாம் என்ற தொலை நோக்கு பார்வையுடன், தனக்கு அளிக்கப்பட்ட, அரசு இல்லத்தை காலி செய்யாமல், அதிலேயே குடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொம்மை அரசில் அமைச்சர்களான சுனில்குமார், நாகேஷ், அரக ஞானேந்திரா உட்பட, சிலருக்கு அரசு இல்லம் கிடைக்காமல், குமார கிருபா, எம்.எல்.ஏ.,க்கள் பவன், பாலபுரூயி விருந்தினர் இல்லத்தில் நாட்களை கழிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X