தடுப்பூசி போடாத தங்கவயல்! | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போடாத தங்கவயல்!

Added : செப் 10, 2021
Share
கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போட்டு வராங்க. தீவிரமா பிரச்சாரமும் செய்றாங்க. கோலாரு மாவட்டத்திலேயே தடுப்பூசி போட்டுக்காதவங்க பட்டியலில், கோல்டு சிட்டி தான் படு மோசம்னு கலெக்டருக்கு தெரிய வந்திருக்கு.கோல்டு சிட்டியில் 45 ஆயிரம் பேர் இன்னும் கூட தடுப்பூசி போட்டுக்கலயாம். இதனால் அவரு முனிசி., நிர்வாகத்தின் செயல்பாடுகள் பற்றி, 'டோஸ்' விட்டிருக்காரு.இதனாலேயே

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போட்டு வராங்க. தீவிரமா பிரச்சாரமும் செய்றாங்க. கோலாரு மாவட்டத்திலேயே தடுப்பூசி போட்டுக்காதவங்க பட்டியலில், கோல்டு சிட்டி தான் படு மோசம்னு கலெக்டருக்கு தெரிய வந்திருக்கு.கோல்டு சிட்டியில் 45 ஆயிரம் பேர் இன்னும் கூட தடுப்பூசி போட்டுக்கலயாம். இதனால் அவரு முனிசி., நிர்வாகத்தின் செயல்பாடுகள் பற்றி, 'டோஸ்' விட்டிருக்காரு.இதனாலேயே தடுப்பூசி போட்டுக்காதவங்களுக்கு இனி கவர்மெண்ட் சலுகை எதுவும் கிடைக்காதுன்னு முனிசி., தலைவரு திடீர் உத்தரவு போட்டிருக்காரு.நகராட்சி உறுப்பினர்கள், ஒவ்வொரு வார்டிலேயும் முகாம் நடத்தி, தடுப்பூசி போட வைக்க ஏற்பாடுகளை இப்போதாவது செய்வரா...


கணக்காளருக்கு நேரம் சரியில்ல!


கோல்டு சிட்டி வருவாய்த்துறை ஆபிசில் கிராம கணக்காளர் ஒருத்தரு, கல்லுாரி பெண்ணை கணக்கு பண்ணிட்டாரு. விஷயம் வெளியே தெரியாமல் மறைக்க கொலை மிரட்டலும் செய்திருக்காரு. கத்திரிகாய் முத்தினா கடைத்தெருவுக்கு வராமலா போகும். மாணவியை ஏமாற்றி, அவர் தங்கியிருந்த அறையில் மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த புகாரு, தாசில்தார், உதவி கலெக்டர் வரை போயிருக்கு. சட்டப்படி நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்துறாங்க.உப்பை தின்னவர் தண்ணீர் குடிக்க தானே வேணும். தப்பு செஞ்சவருக்கு தண்டனை கிடைக்க போறதா வருவாய்த் துறை அலுவலகத்தில் கதை கதையாக பேசுறாங்க.


முனி கை ஓங்கிடுச்சி!


அனுமதி இல்லா கட்டடம், ஆக்ரமிப்புகள், அதிகரித்து வருவதா ஏகப்பட்ட புகார்கள் நகராட்சியில குவிஞ்சிருக்கு.ரெண்டு, மூன்று கட்டடங்களை பார்வையிட முனிசி., முனி போனாரு. இடித்து தள்ளுவதா சப்தம் போட்டாரு. அதுக்கப்புறம் அவரோட குரலுக்கு ஆக் ஷன் என்னாச்சு தெரியல. அசோகா நகர், ராபர்ட்சன் பேட்டை, கவுதம் நகர் ஏரியாவுக்கும் ஆபிசருங்க சட்டவிரோத கட்டடங்களை ஆய்வு செய்ய போயிருக்காங்க. இதனால் நகராட்சி கை கார உறுப்பினர்கள் சிலரு முனி மீது அதிருப்தி அடைஞ்சிருக்காங்க. அவங்க வாய் சண்டையும் நடத்தி னாங்களாம்.அசம்பிளி மேடத்திடம் நியாயம் கேட்டு சிலரு புகார் செய்திருக்காங்க. ஆனால் மேடத்துக்கு முனி., தான் நம்பிக்கைக்குரியவராம். அதனால் எதிர்ப்பெல்லாம் காற்றில் பறக்கும் துாசிப்போல இருக்கும்னு முனிசி., வட்டாரம் பேசுது.


வங்கி லோன் போட்டி!


இன்னும் ஒன்றரை வருஷத்தில அசம்பிளி தேர்தல் வரப்போகுது. தேசியக் கட்சிகள் கிராமந்தோறும் அபிவிருத்தி பணிகள் பேரில் கவனம் செலுத்தி வராங்க. அடுத்த தேர்தலில் பூக்காரங்க ஜெயிச்சாகனும்னு, யூத் கமிட்டிகளை தயார் செய்து வராங்க. அதில் ஒரு பிரிவாக காவிகளின் யூத் பிரிகேட் உருவாகி இருக்கு. ஏற்கனவே ஏ.பி.வி.பி., - வி.ஹெச்.பி., இருக்குது. இத்தோடு புது புதுசா அமைப்புகளும் முளைக்க செய்றாங்க.கடந்த அசம்பிளி தேர்தலில் கை காரங்களுக்கு மகளிர் சங்கத்தின், லோன் தான் கை கொடுத்திச்சு. இம்முறை கூட்டுறவு வங்கியோட நடவடிக்கையை கண்காணிக்க, பூக்காரங்க துவங்கி இருக்காங்க. இது பேர்ல நெருக்கடியை ஏற்படுத்த ரகசிய வேலைகளை நடத்தி வராங்க. முறைகேடுகள் நடப்பதை கண்டறிய கழுகுப் போல பார்வையை செலுத்துறாங்க. வங்கி லோன் பெற்று தருவதில் செங்கோட்டை முனியும் ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட் காட்டப் போறாராம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X