பொது செய்தி

இந்தியா

15 மின் வாகன பயன்பாடு அதிகரிக்கும்; அமைச்சர் சுனில்குமார் எதிர்பார்ப்பு

Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு : ''எதிர்க்காலத்தில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வதால், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை, ஊக்கப்படுத்த வேண்டும்,'' என, மின்சாரத்துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார்.உலக மின்சார வாகன தினத்தையொட்டி, பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கத்தில், மின்சார வாகன ஊர்வலத்தை, விளையாட்டுத்துறை அமைச்சர்

பெங்களூரு : ''எதிர்க்காலத்தில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வதால், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை, ஊக்கப்படுத்த வேண்டும்,'' என, மின்சாரத்துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார்.

உலக மின்சார வாகன தினத்தையொட்டி, பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கத்தில், மின்சார வாகன ஊர்வலத்தை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாராயண கவுடா, பச்சைக்கொடி காண்பித்து, நேற்று துவக்கி வைத்தார்.அதன்பின் மின்சாரத்துறை அமைச்சர் சுனில் குமார், தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனிரத்னா மின்சார வாகனங்களை இயக்கினர்.

அமைச்சர் சுனில்குமார் கூறியதாவது:வரும் நாட்களில், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலை உயருவதால் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்.மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளிக்க, மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது.பெங்களூரில் 136 இடங்களில், 'மின்சார சார்ஜிங் சென்டர்' அமைக்கப்படும். வரும் நாட்களில், இதன் எண்ணிக்கை 500 ஆக உயர்த்தப்படும். பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை நாங்கள் செய்து கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் நாராயண கவுடா கூறியதாவது:நம் உடலையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும். எனவே மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.மின்சார வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தால், வருங்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
10-செப்-202120:44:47 IST Report Abuse
Loganathan Kuttuva பாட்டரியால் இயங்கும் சிறிய ரக சரக்கு வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து புழக்கத்தில் விட வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X