பொது செய்தி

இந்தியா

ஒரு பக்கம் கொரோனா; மறுபுறம் நீரிழிவு

Added : செப் 10, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரை கொரோனா தொற்று புரட்டி போட்டுள்ளது. மாநகராட்சி நடத்திய ஆய்வின்படி, பெங்களூரு நீரிழிவு நோயாளிகள் தலை நகராக மாறியுள்ளது.நகரில் 50.86 சதவீதம் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். கொரோனா முதலாவது, இரண்டாவது அலையில் நீரிழிவு நோயாளிகள் பலர், உயிரை இழந்துஉள்ளனர்.வீடு வீடாக சென்று, ஆய்வு நடத்தப்பட்டது. 21 நாட்களில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 280 வீடுகளின், 7 லட்சத்து 11 ஆயிரத்து

பெங்களூரு : பெங்களூரை கொரோனா தொற்று புரட்டி போட்டுள்ளது. மாநகராட்சி நடத்திய ஆய்வின்படி, பெங்களூரு நீரிழிவு நோயாளிகள் தலை நகராக மாறியுள்ளது.

நகரில் 50.86 சதவீதம் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். கொரோனா முதலாவது, இரண்டாவது அலையில் நீரிழிவு நோயாளிகள் பலர், உயிரை இழந்துஉள்ளனர்.வீடு வீடாக சென்று, ஆய்வு நடத்தப்பட்டது. 21 நாட்களில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 280 வீடுகளின், 7 லட்சத்து 11 ஆயிரத்து 648 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர்.

இதில் 38.82 சதவீதம் பேர் அதிக ரத்த அழுத்தம்; 2.99 சதவீதம் பேர் தைராய்டு; 2.48 சதவீதம் பேர் இதய பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.இதுவரை 22 ஆயிரத்து 313 நீரிழிவு நோயாளிகளுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது, மாநகராட்சி ஆய்வில் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X