மாட்டுக்கொட்டகையில் தங்க வைத்த பெற்றோர்; மகன் தற்கொலை

Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாண்டியா, : குழந்தை பிறக்கவில்லை என்பதால் மகன், மருமகளை, மாட்டுக்கொட்டகையில் தங்க வைத்த பெற்றோர் கொடுமையால், மனம் வருந்திய மகன் தற்கொலை செய்து கொண்டார்.மாண்டியா நாகமங்களா நாகதிஹள்ளி கிராமத்தில் வசிக்கும் ராஜு 62, அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தேவமணி 58, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இத்தம்பதியின் மகன் கிரிஷுக்கு, 32, திருமணமாகி, 11
மாட்டுக்கொட்டகையில் தங்க வைத்த பெற்றோர்; மகன் தற்கொலை

மாண்டியா, : குழந்தை பிறக்கவில்லை என்பதால் மகன், மருமகளை, மாட்டுக்கொட்டகையில் தங்க வைத்த பெற்றோர் கொடுமையால், மனம் வருந்திய மகன் தற்கொலை செய்து கொண்டார்.

மாண்டியா நாகமங்களா நாகதிஹள்ளி கிராமத்தில் வசிக்கும் ராஜு 62, அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தேவமணி 58, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இத்தம்பதியின் மகன் கிரிஷுக்கு, 32, திருமணமாகி, 11 ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் ராஜுவும், அவரது மனைவியும், மகன், மருமகளை மனரீதியில் கொடுமைப்படுத்தினர்.

தினமும் கிண்டல் செய்தனர். இறுதியாக மகன், மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றி, மாட்டுக்கொட்டகையில் அடைத்தனர். சொத்திலும் பங்கு கொடுக்கவில்லை. பிழைப்புக்காக மகன் வைத்திருந்த ஒரு டிராக்டரையும் பறித்துக்கொண்டனர்.வீடு, சொத்து, டிராக்டர் என, எதுவும் இல்லாமல், மனம் வருந்திய கிரிஷ், நேற்று காலை மனைவி இல்லாத நேரத்தில், இறப்புக்கு தன் பெற்றோரே காரணம் என எழுதி வைத்துவிட்டு, கொட்டகையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த பெற்றோர் தலைமறைவாகி விட்டனர். பின்டிகனவிலே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
11-செப்-202104:41:31 IST Report Abuse
NicoleThomson மிக கொடுமையான நேரம் இது குழந்தை இல்லையென்று கொடுமை , பிறந்தால் ஆன் பெண்ணென்று பேதம் இப்போதான் திருத்துவங்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X