மாணவி பலாத்கார இடத்தில் இளம்பெண்ணுடன் ஜாலிக்காக சென்ற இளைஞர்கள்

Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மைசூரு :எம்.பி.ஏ., மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்த பகுதியில், ஜாலியாக இருப்பதற்காக சென்ற, இளைஞர்கள், இளம் பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி, புத்திமதி கூறி திருப்பியனுப்பினர். மைசூரு சாமுண்டி மலையடிவாரத்தில், ஆலனஹள்ளி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில், சில நாட்களுக்கு முன், நண்பருடன் பொழிதை கழிக்க சென்ற எம்.பி.ஏ., மாணவி, இளைஞர் கும்பலால் பாலியல்

மைசூரு :எம்.பி.ஏ., மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்த பகுதியில், ஜாலியாக இருப்பதற்காக சென்ற, இளைஞர்கள், இளம் பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி, புத்திமதி கூறி திருப்பியனுப்பினர்.

மைசூரு சாமுண்டி மலையடிவாரத்தில், ஆலனஹள்ளி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில், சில நாட்களுக்கு முன், நண்பருடன் பொழிதை கழிக்க சென்ற எம்.பி.ஏ., மாணவி, இளைஞர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, 7:00 மணிக்கு வெளி மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த மூன்று இளைஞர்கள், ஒரு இளம் பெண், காரிலிருந்து இறங்கி, மதுபான பாட்டில்களுடன், சம்பவம் நடந்த அதே இடத்துக்கு நடந்து சென்றனர்.இதை கவனித்த சிலர், ஆலனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலிருந்த இளைஞர்கள், இளம்பெண்ணை கண்டுபிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் இவர்கள், மருத்துவ கல்லுாரியில் படிக்கின்றனர். உல்லாசமாக இருக்கும் நோக்கில், ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு வந்தது தெரிந்தது. அவர்களுக்கு போலீசார் புத்திமதி கூறினர்.

இளைஞர்கள், இளம்பெண்ணின் பெற்றோரை, மொபைலில் தொடர்பு கொண்டு எச்சரித்தனர். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும் என, அறிவுறுத்தினர். மாணவி பலாத்கார சம்பவத்துக்கு பின், எச்சரிக்கையடைந்துள்ள மைசூரு போலீசார், கண்காணிப்பை பலப்படுத்தினர்.

மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சந்திர குப்தா, வட்டசாலைகள், புறநகரின் ஆள்நடமாட்டமில்லா இடங்களை, அவ்வபோது நேரில் ஆய்வு செய்கிறார். பொது மக்களும் கூட, சந்தேகத்திற்கிடமானவர்களை கண்டால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் அசம்பாவிதங்களை தடுக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
11-செப்-202110:03:57 IST Report Abuse
suresh kumar //கல்லுாரியில் படிக்கின்றனர்...// படிக்கும் காலத்தில் மற்ற விஷயங்களில் கவனம் சென்றால் படிப்பு ஏறாது. பெற்றோர் மீது மரியாதையில்லா பிள்ளைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X