பொது செய்தி

தமிழ்நாடு

சாலை வழித்தட அளவீடுகள் 'டிஜிட்டல்' முறையில் பதிவு

Added : செப் 10, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை அளவீடுகள், 'டிஜிட்டல்' முறையில் பதியப்படுகிறது.வாகன போக்குவரத்திற்கு, சாலைகள் இன்றியமையாதது. இவை, தேசிய, மாநில, மாவட்ட, இதர சாலைகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.சாலை வழித்தடங்களுக்கு நீளம், அகலம், கனம், தரைமட்டத்திலிருந்து உயரம் ஆகிய அளவீடுகள் உண்டு. பொறியாளர்கள், அளவீட்டு கருவிகள் மூலம் இவற்றை அளவிட்டு,

மாமல்லபுரம் : மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை அளவீடுகள், 'டிஜிட்டல்' முறையில் பதியப்படுகிறது.வாகன போக்குவரத்திற்கு, சாலைகள் இன்றியமையாதது.

இவை, தேசிய, மாநில, மாவட்ட, இதர சாலைகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.சாலை வழித்தடங்களுக்கு நீளம், அகலம், கனம், தரைமட்டத்திலிருந்து உயரம் ஆகிய அளவீடுகள் உண்டு. பொறியாளர்கள், அளவீட்டு கருவிகள் மூலம் இவற்றை அளவிட்டு, பதிவேடுகளில் பதிவர்.அளவிட்ட குறிப்புகளை கைகளால் எழுதி பதிவது, வழக்கமான நடைமுறை. இவ்வகையில் காலதாமதம் ஏற்படும்.

தற்காலத்தில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகும் சூழலில், சாலை அளவீட்டு பதிவும் டிஜிட்டல் நடைமுறைக்கு மாறுகிறது.தேசிய நெடுஞ்சாலை அளவீட்டிற்கு, 'டோட்டல் ஸ்டேஷன்' எனப்படும் நவீன டிஜிட்டல் சாதனம், தற்போது பயன்படுத்தப்படுகிறது.இதன் வெவ்வேறு கருவிகளை, அளவிட வேண்டிய பகுதியில் குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, கதிரியக்க தொடர்பு மூலம் அளவிட்டு, டிஜிட்டல் முறையில் பதியப்படுகின்றன.

'பாரத் மாலா பாரியோஜனா' திட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை, நான்குவழி பாதையாக மேம்படுத்தப்பட உள்ள, மாமல்லபுரம் - புதுச்சேரி, 95 கி.மீ., வழித்தட அளவீடுகள், இத்தகைய நவீன டிஜிட்டல் முறையில், தற்போது அளவிட்டு பதியப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X