தமிழ்நாடு

கணபதி வந்தாச்சு; மனசு நிறைஞ்சாச்சு!

Added : செப் 10, 2021
Share
Advertisement
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுவதால், சிலைகள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.திருத்தணி நகரத்தில், ம.பொ.சி., சாலை, காந்தி சிலை அருகில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.விநாயகர் பூஜைக்கு தேவையான விநாயகர் குடை, எருக்கம் பூ மாலை, அருக்கம்புல், ஆப்பிள்,

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுவதால், சிலைகள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

திருத்தணி நகரத்தில், ம.பொ.சி., சாலை, காந்தி சிலை அருகில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.விநாயகர் பூஜைக்கு தேவையான விநாயகர் குடை, எருக்கம் பூ மாலை, அருக்கம்புல், ஆப்பிள், சாத்துக்குடி, விலாப்பழம், கம்புகதிர், மக்காசோளம், நாவல், திராட்சை மற்றும் செங்கரும்பு போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்தாண்டு வாழைக்கன்று ஒரு ஜதை, 40 ரூபாயும், ஒரு ஜோடி கரும்பு, 100 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இரண்டு கம்புகதிர், 20 ரூபாயும், ஒரு மக்காசோளம், 10 ரூபாய் விற்கப்பட்டது.கிலோ ஆப்பிள், 100; சாத்துக்குடி, 20; ஆரஞ்சு, 60; கொய்யா, 40 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் வாழைப்பழம் ஒரு டஜன், 60 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு இவற்றின் விலை குறைந்துள்ளது. கிலோ சாமந்தி பூ 200 - 250 ரூபாய் வரை விற்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன், சாமந்தி பூ, 1 கிலோ, 120 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது.

ஊத்துக்கோட்டையில், ஒரு அடி முதல், 3 அடி உயரமுள்ள வண்ண விநாயகர் சிலைகள், 100 - 1,000 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளன.காஞ்சிபுரம்காஞ்சிபுரத்தின் பல இடங்களில், வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக, சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை, நேற்று களைகட்டின. அதேபோல் விநாயகர் பூஜை வழிபாட்டுக்கான பழம் வகைகள், சிறிய குடைகள் விற்பனை செய்யப்பட்டன.

காகிதக் கூழ் விநாயகர் சிலை

விற்பனை வியாபாரி ராஜா கூறியதாவது:இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு விநாயகர் சிலை விற்பனை ஆகவில்லை. எனினும் போட்ட முதலை எடுக்க வியாபாரம் செய்கிறோம்.காஞ்சிபுரத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலை 80 ரூபாயில் இருந்து, 800 ரூபாய் வரை விற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.உத்திரமேரூர்விநாயகருக்கு மிகவும் உகந்ததாக எருக்கம் பூ கருதப்படுவதால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயருக்கு எருக்கம் பூ மாலை அணிவிப்பது வழக்கமாக உள்ளது.

இதனால், விநாயகர் சதுர்த்தியன்று விற்பனை செய்வதற்காக, உத்திரமேரூர் சுற்று வட்டாரத்தில் சாலையோரம், வயல்வெளி, ஏரிக்கரையோரங்களில் எருக்கம் பூக்களைப் பறித்து, அதை மாலையாக கோர்த்து விற்கின்றனர். ஒரு எருக்கம்பூ மாலை, 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பூ, பழங்கள், கரும்பு, பொரி, பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.கடந்தாண்டு களிமண்ணால் ஆன சிறிய விநாயகர் சிலை ஒன்றின் விலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

களிமண் சிலை '‛ரெடி'

கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே, திப்பன்பாளையம் கிராமத்தில் அரை அடி முதல், ஒன்றரை அடி உயரம் வரையிலான களிமண் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.குயவர் ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணத்தால் பெரும்பாலான சிலைகளை விற்க முடியாமல் போனது. இம்முறை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X