ஊராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி; 37 தலைவர்களுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி; 37 தலைவர்களுக்கு பாராட்டு

Added : செப் 10, 2021
Share
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியில், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை பாராட்டும் விதமாகவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் இலக்கை எட்ட வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பேரணியில், எஸ்.பி., வருண்குமார், டி.ஆர்.ஓ., மீனா பிரியதர்ஷிணி உள்ளிட்டோர்

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியில், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை பாராட்டும் விதமாகவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் இலக்கை எட்ட வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார்.

பேரணியில், எஸ்.பி., வருண்குமார், டி.ஆர்.ஓ., மீனா பிரியதர்ஷிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின் கலெக்டர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 80 ஆயிரம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. கடந்த 3ம் தேதி ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வரும் 12ம் தேதி மாநிலம் முழுதும் 25 லட்சம் தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ஒரு லட்சம் பேருக்கு, தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பின், கலெக்டர் அலுவலகத்தில், 100 சதவீதம் தடுப்பூசிகள் போடப்பட்ட 37 ஊராட்சி பிரதிநிதிகளுக்கு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜவஹர்லால் உட்பட பலர் பங்கேற்றனர்

.ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சியில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தில்லைகுமார் வரவேற்றார். கலெக்டர், எஸ்.பி., மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற டூ - வீலர் பேரணி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X