இந்தியா

ஆசிரியர் நியமனம் முறைப்படுத்த கோரிக்கை

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஆசிரியர் நியமனத்தில் நியமன விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து சங்க மாநிலத் தலைவர் பாட்சா வெளியிட்டுள்ள அறிக்கை:நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கை 2020- அமல்படுத்த தயாராக உள்ள நிலையிலும், ஒப்பந்தம் மற்றும் வேறு எந்த முறையில் எந்த ஆசிரியர்களையும் பணி நியமனம் செய்யக்கூடாது என தெளிவாக

புதுச்சேரி : ஆசிரியர் நியமனத்தில் நியமன விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்க மாநிலத் தலைவர் பாட்சா வெளியிட்டுள்ள அறிக்கை:நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கை 2020- அமல்படுத்த தயாராக உள்ள நிலையிலும், ஒப்பந்தம் மற்றும் வேறு எந்த முறையில் எந்த ஆசிரியர்களையும் பணி நியமனம் செய்யக்கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது

ஆனால் புதுச்சேரியில் தேசிய கல்விக்கொள்கை 2020ஐ புறம் தள்ளி, அவசர கோலத்தில் கல்வித்துறை அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு தவறான தகவலை கூறி, ஆசிரியர் நியமனங்களை செய்கின்றனர்.கடந்த 2017ம் ஆண்டு 58 கணினி ஆசிரியர்கள், கடந்தாண்டு 132 ஆசிரியர்கள், துறையின் உள்ளே 81 ஆசிரியர்கள் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் உள்ளனர்.அனைவரையும் முறையான நியமன விதிகளை பின்பற்றி நியமித்து இருந்தால், வேலை கிடைக்காதவர்கள் வேறு வேலைக்கு சென்று இருப்பார்கள்.

ஐந்து ஆண்டுகள் கழித்து வீட்டுக்கு அனுப்புவதால் அவர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் முதல்வர், கல்வி அமைச்சர், அதிகாரிகள் சொல்வதை தவிர்த்து, பணி நியமனங்களை முறைப்படுத்த வேண்டும்.அவசர காலத்தில் ஏஜென்சி மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்வது என்றாலும் கல்வித்துறை அதிகாரிகளே தேர்வு செய்து ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X