இந்தியா

பச்சிளம் குழந்தைகளுக்கு 'நீமோகாக்கல்' தடுப்பூசி; மகளிர் மருத்துவமனையில் நாளை துவக்கம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பச்சிளம் குழந்தைகள் உயிரை காக்கும் 'நீமோகாக்கல்' தடுப்பூசியை புதுச்சேரியில் இலவசமாக போடும் திட்டம் நாளை துவக்கி வைக்கப்பட உள்ளது.நிமோனியா நோய் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 15 சதவீதம் இறப்பு ஏற்படுத்துகிறது.நிமோனியாவை கட்டுப்படுத்த, 'நீமோகாக்கல் காஞ்சுகேட்' என்ற

புதுச்சேரி : பச்சிளம் குழந்தைகள் உயிரை காக்கும் 'நீமோகாக்கல்' தடுப்பூசியை புதுச்சேரியில் இலவசமாக போடும் திட்டம் நாளை துவக்கி வைக்கப்பட உள்ளது.

நிமோனியா நோய் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 15 சதவீதம் இறப்பு ஏற்படுத்துகிறது.நிமோனியாவை கட்டுப்படுத்த, 'நீமோகாக்கல் காஞ்சுகேட்' என்ற தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. நீமோகாக்கல்' தடுப்பூசியை குழந்தை பிறந்த 6வது, 14வது வாரம் மற்றும் 9 மாதங்களில் என மூன்று முறை செலுத்த வேண்டும்.

இந்நிலையில், புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறை, தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், நீமோகாக்கல் தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளது.இத்தடுப்பூசி செலுத்தும் பணி, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நாளை 11ம் தேதி துவக்கப்படுகிறது.துவக்க நிகழ்ச்சியில், கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்கின்றனர். முதற்கட்டமாக, புதுச்சேரிக்கு 1,500 டோஸ் நீமோகாக்கல் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், மிகத்தீவிரமான 10 நோய்களுக்கான தடுப்பூசிகளை அனைத்து குழந்தைகளுக்கும் அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இப்போது, விலை உயர்ந்த, நீமோகாக்கல் தடுப்பூசியை இலவசமாக தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.

நீமோகாக்கல் நோயானது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல், காதுகள் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் ரத்தத்தில் கலக்கும் பொழுது மிக தீவிர நோயாக மாறி குழந்தையின் உயிருக்கே ஆபத்து நேரலாம். இதை தடுக்கவே நீமோகாக்கல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X