இந்தியா

வெடிகுண்டு மிரட்டல்; வாலிபருக்கு வலை

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அலுவலகத்தை வெடிகுண்டு வீசி தகர்த்து விடுவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லித்தோப்பு, அண்ணா நகர் 3வது குறுக்கு தெருவில் மத்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை இயங்கி வருகிறது.இங்கு பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன்,57.இவர் நேற்று பணியில் இருந்தபோது

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அலுவலகத்தை வெடிகுண்டு வீசி தகர்த்து விடுவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லித்தோப்பு, அண்ணா நகர் 3வது குறுக்கு தெருவில் மத்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை இயங்கி வருகிறது.இங்கு பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன்,57.இவர் நேற்று பணியில் இருந்தபோது மதியம் 2.௦௦ மணியளவில் அரியாங்குப்பம் சோழபுரம் திருப்பூர் குமரன் வீதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வந்தார்.தொல்லியல் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர்.

ஆவேசமடைந்த ரமேஷ், அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களை மிரட்டியதோடு, அலுவலகத்தை வெடிகுண்டு வீசி தகர்த்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். அதிகாரிகளை பணி செய்ய விடவில்லை..இது குறித்து உதவி பராமரிப்பு உதவியாளர் ரவிச்சந்திரன் உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். ரமேஷ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X