இந்தியா

பாத்திமா பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பாத்திமா பள்ளி ஊழியர் சங்க செயலாளர் அருள்சவரி தலைமை தாங்கினார். கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி சம்மேளன கவுரவ தலைவர் வின்சென்ட்ராஜ், தலைவர் ராஜன், மத்திய அரசு ஊழியர் சம்மேளன பொறுப்பாளர்கள்

புதுச்சேரி : கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாத்திமா பள்ளி ஊழியர் சங்க செயலாளர் அருள்சவரி தலைமை தாங்கினார். கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி சம்மேளன கவுரவ தலைவர் வின்சென்ட்ராஜ், தலைவர் ராஜன், மத்திய அரசு ஊழியர் சம்மேளன பொறுப்பாளர்கள் பாலமோகனன், ரவிசந்திரன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில், பாத்திமா பள்ளியில் பல ஆசிரியர்கள், ஊழியர்கள் தொடர்ந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கவில்லை. ஆசிரியர், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு,100 சதவீத சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X