இந்தியா

கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலி பரை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன்பேரில், லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபரை கையும்

புதுச்சேரி : கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலி பரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன்பேரில், லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர், முத்திரையர்பாளையம் காந்திதிருநல்லுாரை சேர்ந்த கஞ்சா வியாபாரி சந்தோஷ், 23; என்பது தெரியவந்தது.அதையடுத்து, சந்தோஷை கைது செய்து, 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.3,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X