இந்தியா

மத்திய சிறை கைதிகள் தயாரித்த விநாயகர் சிலை விற்பனை துவக்கம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த விநாயகர் சிலைகள் விற்பனையை சிறைத்துறை ஐ.ஜி., நேற்று துவக்கி வைத்தார்.காலாப்பட்டு மத்திய சிறையில், 200க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதில், கைதிகள் காகிதக்கூழ் மூலம் அரை அடி முதல் 2 அடி உயரம் வரையில் பல்வேறு

புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த விநாயகர் சிலைகள் விற்பனையை சிறைத்துறை ஐ.ஜி., நேற்று துவக்கி வைத்தார்.

காலாப்பட்டு மத்திய சிறையில், 200க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதில், கைதிகள் காகிதக்கூழ் மூலம் அரை அடி முதல் 2 அடி உயரம் வரையில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.இந்த சிலைகளை விநாயகர் சதுர்த்திக்கு விற்பனை செய்யும் பணி, புதுச்சேரி உள்ளாட்சி துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

சிறைத்துறை ஐ.ஜி.,யான உள்ளாட்சி துறை இயக்குநர் ரவிதீப் சிங் சாகர், கைதிகள் தயாரித்த விநாயகர் சிலைகளை பார்வையிட்டு, விற்பனையை துவக்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சிறையில் கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களின் மறுவாழ்விற்கு உதவிடும் வகையில் அரவிந்தர் சொசைட்டி மூலம் பல்வேறு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.கைதிகளால் தயாரிக்கப்படும் சிலைகள், மிதியடி உள்ளிட்ட பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக, கைதிகளை அவரது உறவினர்கள் பார்க்க அனுமதிக்காததால், விசாரணை கைதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, சிறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, கைதிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு தொழில் பயிற்சிகளும் அளித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X