இந்தியா

கார் மோதி டிரைவர் பலி

Added : செப் 10, 2021
Share
Advertisement
பாகூர் : அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், சாலையை கடக்க முயன்ற லாரி டிரைவர் உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 35; லாரி டிரைவர். இவர் குஜராத்தில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு, கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு,

பாகூர் : அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், சாலையை கடக்க முயன்ற லாரி டிரைவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 35; லாரி டிரைவர். இவர் குஜராத்தில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு, கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு, ஓட்டலில் சாப்பிட, பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.

கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் படுகாயமடைந்த ராஜாவை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜா, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தெற்கு போக்குவரத்து போலீசார் விசாரிக்கின் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X