தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழாவில் தடையை மீறினால் நடவடிக்கை! போலீசார் தீவிர கண்காணிப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
கடலுார் : கொரோனா பரவலையொட்டி, விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாக கொண்டாட அரசு தடை விதித்துள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் போலீசார், வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று (10ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது
விநாயகர் சதுர்த்தி விழாவில் தடையை மீறினால் நடவடிக்கை! போலீசார் தீவிர கண்காணிப்பு

கடலுார் : கொரோனா பரவலையொட்டி, விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாக கொண்டாட அரசு தடை விதித்துள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் போலீசார், வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று (10ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விமர்சையாக விழா கொண்டாடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அரசு தடை விதித்துள்ளது. அவரவர் வீடுகளில் சிறிய அளவில் சிலை வைத்து எளிமையாக விழா கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் அரசின் நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக, காவல்துறை, உள்ளாட்சி், வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆலோசனை நடத்தினார். அப்போது, காவல்துறை அதிகாரிகள், சப் கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.,க்கள் உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், இது தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய போலீஸ் உட்கோட்ட பகுதியில் அரசியல் கட்சியினர் மற்றும் ஆன்மிக அமைப்பினரை அழைத்து, சப் கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் அறிவுறுத்தினர். ஒவ்வொரு போலீஸ் நிலையம் சார்பிலும், அந்தந்த பகுதியில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் வைத்து கொண்டாப்படுவதை முன்கூட்டியே அறிந்து தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார், வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசின் தடையை மீறி பொது இடங்களில் சிலை வைத்தாலோ, ஊர்வலமாக சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள போலீசார், தடையை மீறுவோர் மீது வழக்கு பதியவும் முடிவு செய்துள்ளனர்.


மங்கலம்பேட்டையில் எஸ்.பி., ஆய்வு


ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று மங்கலம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, மூன்றாம் நாள் கடலுார் தேவனாம்பட்டினம் கடலில் விஜர்சனம் செய்யப்படும். நடப்பாண்டு தடை உள்ளதால், மங்கலம்பேட்டை பகுதியில் சிலைகள் பிரதிஷ்டை செய்யவில்லை. இதனால், எஸ்.பி., சக்திகணேசன் நேற்று மாலை மங்கலம்பேட்டை பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, இந்து முன்னணி நிர்வாகிகளிடம், பொது இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தடை உள்ளதால், அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர்கள் விஜயரங்கன், விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் உடனிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X