பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறியவர்களுக்கு ரூ.23,000 அபராதம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறையை பின்பற்றாதோருக்கு 23 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமாக, கலெக்டர் மோகன் விதித்து நடவடிக்கை எடுத்தார்.விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் பொருட்களை வாங்க அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா

விழுப்புரம் : விழுப்புரத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறையை பின்பற்றாதோருக்கு 23 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமாக, கலெக்டர் மோகன் விதித்து நடவடிக்கை எடுத்தார்.

விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் பொருட்களை வாங்க அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது, மளிகை, பல்பொருள் அங்காடி, துணி கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாததை கண்டறிந்த கலெக்டர், ஆறு கடைகள், இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் சென்ற 17 பேருக்கு என மொத்தம் 23 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதித்தார்.வியாபாரிகளிடம், கொரோனா விதிமுறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார். நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், திண்ணாயிரமூர்த்தி, ரமணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X