சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முற்றுகை

Added : செப் 10, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளபாக்கத்தில் தமிழக அரசின் நெல் விதைப்பண்ணை 100 ஏக்கர் பரப்பில் செயல்பட்டது. விதைப் பண்ணை பல ஆண்டுகளாக செயல் படாததால் முட்புதர்கள் வளர்ந்து பாழாகி வருகிறது. அந்த இடத்தில் ஒரு பகுதியை போலீஸ் குடியிருப்பு கட்ட எடுத்து கொண்டனர். மீதியுள்ள இடத்தில் 5 ஏக்கர் பரப்பில் கடலுார் நகராட்சியில் சேரும் குப்பைகளை சேமிக்கும் குப்பை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளபாக்கத்தில் தமிழக அரசின் நெல் விதைப்பண்ணை 100 ஏக்கர் பரப்பில் செயல்பட்டது. விதைப் பண்ணை பல ஆண்டுகளாக செயல் படாததால் முட்புதர்கள் வளர்ந்து பாழாகி வருகிறது. அந்த இடத்தில் ஒரு பகுதியை போலீஸ் குடியிருப்பு கட்ட எடுத்து கொண்டனர்.

மீதியுள்ள இடத்தில் 5 ஏக்கர் பரப்பில் கடலுார் நகராட்சியில் சேரும் குப்பைகளை சேமிக்கும் குப்பை கிடங்காக மாற்ற முடிவு செய்தனர்.அந்த இடத்தை நேற்று துணை தாசில்தார் அசோகன், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் பொக்லைன் இயந்திரத்துடன் சுத்தம் செய்ய சென்றனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அந்த இடத்தை சுற்றி விவசாய நிலங்களும் குடியிருப்புகளும் உள்ளதால் நிலத்தடிநீர் மற்றும் சுற்றுசூழல் பாதிக்கும். அங்கு மீண்டும் விதைப்பண்ணை அமைக்க வேண்டும். குப்பை கிடங்கு அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் பேச்சு வார்த்தை நடத்தி மக்களை அமைதிபடுத்தினார். மக்களின் எதிர்ப்பால் சுத்தம் செய்யும் பணியை செய்யாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X