ஆற்காட்டம்மன் கோவில் கும்பாபிஷேக விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்காட்டம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Added : செப் 10, 2021
Share
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் ஆற்காட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்நடந்தது.விக்கிரவாண்டி பேரூராட்சி, குளக்கரையில் குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் மற்றும் கிராம பொது மக்களால் புதியதாக ஆற்காட்டம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு நான்காம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் ஆற்காட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்நடந்தது.

விக்கிரவாண்டி பேரூராட்சி, குளக்கரையில் குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் மற்றும் கிராம பொது மக்களால் புதியதாக ஆற்காட்டம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று காலை 7.30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, 7.57 மணிக்கு கடம்புறப்பாடு, 8.07 மணிக்கு கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக யாகசாலையில் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்று பூஜைகள் செய்து, ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.

யாகசாலை பூஜைகளை விக்கிரவாண்டி ரவிச்சந்திர குருக்கள் தலைமையில் வேதாத்திரி சுவாமிகள், சந்திரசேகர குருக்கள் செய்தனர்.சுவாமி சிலை பிரதிஷ்டை, அபிேஷக ஆராதனைகளை ஸ்தபதி சுப்ரமணி, பூசாரிகள் பலராமன், காசிலிங்கம், முருகன், வினோத் மற்றும் குழுவினர் செய்தனர். விக்கிரவாண்டி மற்றும் குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா குமாரசாமி தலைமையில் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X