பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு துறை மளிகை தொகுப்பு; சிறப்பு பள்ளிக்கு கலெக்டர் வழங்கல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் கூட்டுறவு துறை சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை, மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு, கலெக்டர் மோகன் வழங்கினார்.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு கூட்டுறவு துறை சார்பில் வழங்கப்பட்டது. இதில், மீதமுள்ள மளிகை பொருட்கள் அடங்கிய 1,597 தொகுப்புகளை

விழுப்புரம் : விழுப்புரத்தில் கூட்டுறவு துறை சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை, மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு, கலெக்டர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு கூட்டுறவு துறை சார்பில் வழங்கப்பட்டது. இதில், மீதமுள்ள மளிகை பொருட்கள் அடங்கிய 1,597 தொகுப்புகளை கொரோனா நோய் தொற்றால் பாதித்தோர், அரசு மனநல காப்பகங்கள், தொழுநோயாளிகளுக்கான காப்பகங்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகள், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலா காதுகேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி மாணவர்கள், அன்பு இல்லம், செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு மளிகை பொருட்கள் கொண்ட 397 தொகுப்புகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.மண்டல இணைப்பதிவாளர் பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அறிவுடைநம்பி, துணை பதிவாளர் நளினா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஷீனா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X