வடலுார் நியூ கிருஷ்ணா சுவீட்ஸ் கடலுாரில் கோலாகல திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடலுார் நியூ கிருஷ்ணா சுவீட்ஸ் கடலுாரில் கோலாகல திறப்பு

Added : செப் 10, 2021
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் புகழ்பெற்ற வடலுார் நியூ கிருஷ்ணா பேக்கரி மற்றும் சுவீட்ஸ் கடை நிறுவனத்தின் புதிய கிளை கடலுார் ஜி.ஆர்.கே., லிங்க் ரோடு, கிருஷ்ணாலயா தியேட்டர் அருகே நவீன வசதிகளுடன் நேற்று திறக்கப்பட்டது.கடை உரிமையாளரும் வடலுார் வர்த்தக சங்க செயலாளருமான தனசேகரன், டாக்டர் சரண்ராஜ் வரவேற்றனர். மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சண்முகம்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் புகழ்பெற்ற வடலுார் நியூ கிருஷ்ணா பேக்கரி மற்றும் சுவீட்ஸ் கடை நிறுவனத்தின் புதிய கிளை கடலுார் ஜி.ஆர்.கே., லிங்க் ரோடு, கிருஷ்ணாலயா தியேட்டர் அருகே நவீன வசதிகளுடன் நேற்று திறக்கப்பட்டது.

கடை உரிமையாளரும் வடலுார் வர்த்தக சங்க செயலாளருமான தனசேகரன், டாக்டர் சரண்ராஜ் வரவேற்றனர். மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சண்முகம் தலைமையில், டாக்டர் மாரியப்பன் திறந்து வைத்தார். டாக்டர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். டாக்டர் துரைசெல்வன் குத்துவிளக்கேற்றினார்.முதல் விற்பனையை மூத்த வழக்கறிஞர் சிவமணி பெற்றுக்கொண்டார்.

தெற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் வடலுார் காமராஜ், வர்த்தக சங்க நிர்வாகிகள் வீரப்பன், முருகன், பட்டேல், செல்லபாண்டியன், கலைச்செல்வன், சந்திரகாசன், சதீஷ், வீனஸ் சேகர், வீரமணி, வடலுார் ஞானசேகரன் மற்றும் பாதிரிகுப்பம் ஊராட்சி தலைவர் சரவணன், தொழிலதிபர் சக்திவேல், ரோட்டரி துணை ஆளுனர் பூங்குன்றன், பவானி மசாலா நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர், தி.மு.க., நகர செயலாளர் ராஜா, ஓசூர் தொழிலதிபர் விஸ்வநாதன், அஜய், மதுரை வேலு, தஞ்சாவூர் ரமேஷ், த.மா.கா., அன்பு, சன் பிரைட் பிரகாஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் தனசேகரன் கூறுகையில், ஏசி வசதியுடன் அனைத்து சுவீட்ஸ்கள், பேக்கரி வகைகள், புரூட் சாலட்கள், உயர்தர சுவையுடன் தயாரித்து விற்பனை செய்கிறோம். டீ, காபி, பாதாம்பால், பப்ஸ் வகைகளும் சுவையாக கிடைக்கும் என, தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புகழ்பெற்ற சூப்பர் ருசி பாலில் தயாரான டீ, காபி, வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X