அரசு உத்தரவை மீறினால் நடவடிக்கை: எஸ்.பி., ஸ்ரீநாதா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உத்தரவை மீறினால் நடவடிக்கை: எஸ்.பி., ஸ்ரீநாதா

Added : செப் 10, 2021
Share
விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தியன்று அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.அவர், கூறியதாவது;கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் தங்களின் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபாடு செய்யலாம். அந்த சிலைகளை ஊர்வலமாக

விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தியன்று அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.

அவர், கூறியதாவது;கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் தங்களின் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபாடு செய்யலாம். அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லக்கூடாது. தனிநபராக விநாயகர் சிலைகளை எடுத்துச்சென்று, நீர்நிலைகளில் கரைக்க அனுமதியளிக்கப்படும். அரசின் உத்தரவை மீறினால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X