பொது செய்தி

தமிழ்நாடு

12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்: கலெக்டர் மோகன் தகவல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 12ம் தேதி 1,150 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் மோகன் கூறியதாவது;விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில், மூன்றாவது அலை பாதுகாப்பு நடவடிக்கையாக, மாவட்டத்தில் வரும் 12ம் தேதி 1,150 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 12ம் தேதி 1,150 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் மோகன் கூறியதாவது;விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில், மூன்றாவது அலை பாதுகாப்பு நடவடிக்கையாக, மாவட்டத்தில் வரும் 12ம் தேதி 1,150 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் நுாறுநாள் வேலை பணித்தளத்தில் இம்முகாம் நடக்கிறது.

இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் 10,000 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். மேலும், 1.15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6.61.017 நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.இதில் 55, 000 நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசிகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள பொதுமக்களின் மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

தடுப்பூசி செலுத்துவதால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். செஞ்சியில் நுாறுநாள் வேலை திட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண் இறந்தது தொடர்பான உடற்கூராய்வு அறிக்கை சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அரசு துறைகளில் உள்ள 94.76 சதவீதம் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X