பொது செய்தி

தமிழ்நாடு

மெகா தடுப்பூசி முகாம் ஆலோசனை கூட்டம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகாவில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., அரிதாஸ் தலைமை தாங்கினார். தாசில்தார் தமிழ்செல்வி, பி.டி.ஓ., நாராயணன் முன்னிலை வகித்தனர். மண்டல துணைதாசில்தார் செல்வமூர்த்தி வரவேற்றார் .கூட்டத்தில் வரும் 12ம் தேதி தாலுகாவிலுள்ள பொது மக்களை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகாவில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., அரிதாஸ் தலைமை தாங்கினார். தாசில்தார் தமிழ்செல்வி, பி.டி.ஓ., நாராயணன் முன்னிலை வகித்தனர். மண்டல துணைதாசில்தார் செல்வமூர்த்தி வரவேற்றார் .கூட்டத்தில் வரும் 12ம் தேதி தாலுகாவிலுள்ள பொது மக்களை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது. விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விதிமுறை படி பொது இடங்களில் வழிபடக்கூடாது. இதனை அனைத்து வி.ஏ.ஓ.,க்கள் கண்காணித்து உறுதி செய்யவேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.சப்-கலெக்டர் கதிரேசன், டாக்டர் பாலாஜி அய்யனார், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் சார்லின், சித்ரா, திருமதி மற்றும் தாலுகாவிலுள்ள அனைத்து வி.ஏ.ஓ., கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X