தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் வாங்க ஆர்வம்! மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது, இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று, பொதுமக்கள் தங்களின்
விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் வாங்க ஆர்வம்! மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது, இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று, பொதுமக்கள் தங்களின் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து பூஜைகள் செய்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொதுமக்கள் பூஜை பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதற்காக, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட நகரப்பகுதிகளில் உள்ள மார்க்கெட்டிற்கு, சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமாக குவிந்தனர். சிறிய அளவிலான விநாயகர் சிலை, பூஜை பொருட்கள், பூ மற்றும் காய்கறிகளை பொதுமக்கள் வாங்கினர்.

இதனால், மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வாழை பழம் ஒரு தார் 400 முதல் 500 ரூபாய் வரையிலும், ஒரு சீப் 40 முதல் 60 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

வெற்றிலை ஒரு கவுளி 80 ரூபாய்க்கும், பூக்கள் வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும், பொறி விற்பனை டல்லாக இருந்தது.பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்தால் மட்டுமே பொறி விற்பனை அதிகரித்து காணப்படும். பெரிய சிலைகளுக்கு அனுமதியில்லாததால், பொதுமக்கள் தங்களின் வீடுகளில் பூஜை செய்வதற்கு குறைவாக பொறிகள் வாங்கிச்சென்றனர்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பூஜை பொருட்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.பூஜை பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மார்க்கெட் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X