சென்னை - திருச்சி சாலையில் வாகனங்கள் மோதி டிராபிக் ஜாம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை - திருச்சி சாலையில் வாகனங்கள் மோதி 'டிராபிக் ஜாம்'

Added : செப் 10, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதியதில், போக்குவரத்து பாதித்தது.சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று ஷிப்ட் கார் ஒன்று சென்றது. இந்த காரில், சென்னை, மாம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன்,44; அவரது மனைவி கவிதா, உறவினர் மாணிக்கம் ஆகியோர் பயணித்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டினார்.விழுப்புரம் அருகே

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதியதில், போக்குவரத்து பாதித்தது.

சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று ஷிப்ட் கார் ஒன்று சென்றது. இந்த காரில், சென்னை, மாம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன்,44; அவரது மனைவி கவிதா, உறவினர் மாணிக்கம் ஆகியோர் பயணித்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டினார்.விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் மேம்பாலத்தில் மதியம் 1.30 மணிக்கு, வந்த போது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி, நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதனால், காரை பின் தொடர்ந்து வந்த வந்த சென்னை - திருச்சி மார்க்க தனியார் ஆம்னி பஸ், வேன், இரு கார்கள் என அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார்த்திகேயன் உட்பட நால்வரும் லேசான காயங்களோடு அதிர்ஷ்டவசமாக தப்பினர். இவ்விபத்தால், விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த விழுப்புரம் தாலுகா மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்துக்குள்ளாகிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X