பொது செய்தி

தமிழ்நாடு

கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லுாரியில் விண்ணப்பங்களை பெற்று, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.இதுதொடர்பாக கல்லுாரி முதல்வர் சண்முகம்(பொ) விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்கி வரும் அரசு கலை கல்லுாரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லுாரியில் விண்ணப்பங்களை பெற்று, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

இதுதொடர்பாக கல்லுாரி முதல்வர் சண்முகம்(பொ) விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்கி வரும் அரசு கலை கல்லுாரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. கல்லுாரியில் முதலாமாண்டு சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் நேரில் வந்து விண்ணப்பித்து, கல்லுாரியில் சேரலாம்.

வரும் 13ம் தேதி பி.ஏ., தமிழ், பொருளியல், பி.காம்., வணிகவியலுக்கும், 14ம் தேதி பி.எஸ்சி., கணினிஅறிவியல், புள்ளியியல் ஆகிய துறைகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.மாணவ, மாணவிகள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இலவசம். சாதிசான்றிதழை காண்பித்து ரூ.2 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும் விபரங்களுக்கு www.gascrishivandiyam.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். அல்லது மாணவர் சேர்க்கை மையத்தை 98431 75303 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X