பொது செய்தி

தமிழ்நாடு

தாட்கோ மூலம் வங்கி கடன் பயனாளிகளுக்கு நேர்காணல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் மானியத்துடன் வங்கி கடன் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தை சேர்ந்த 154 பேர் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் தொழில் முனைவோர் கடன், வாகன கடன், சிறு தொழில் கடன், கால்நடை வளர்ப்பு உட்பட பல்வேறு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் மானியத்துடன் வங்கி கடன் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தை சேர்ந்த 154 பேர் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் தொழில் முனைவோர் கடன், வாகன கடன், சிறு தொழில் கடன், கால்நடை வளர்ப்பு உட்பட பல்வேறு தொழில் கடன் கோரி விண்ணப்பித்திருந்தனர்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில், பயனாளிகளுக்கான நேர்காணல் நடந்தது.

முகாமில் கலெக்டர் கூறுகையில், 'தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற தாட்கோ மூலம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வங்கி கடன்களை பெற்று சிறந்த தொழில் முனைவோராக உருவாகிட வேண்டும்' என்றார்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், தாட்கோ மாவட்ட மேலாளர் குப்புசாமி, உதவி மேலாளர் சத்தியவர்த்தினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகேஷ், உதவி பொறியாளர் பிரசன்னா, உதவி திட்ட அலுவலர் கமலவள்ளி, உதவி இயக்குனர் பெரியசாமி மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X