சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியில் சிக்கி மாணவர் சாவு

Added : செப் 10, 2021
Share
Advertisement
கடலுார் : தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற பள்ளி மாணவர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.கடலுார் குண்டு உப்பலவாடியைச் சேர்ந்தவர் பன்னீர். இவரது மனைவி வைதேகி. இவர்களது மகன் பிரகாஷ், 12; கடலுார் மஞ்சக்குப்பம் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்தார். நேற்று காலை கடலுார் முதுநகரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக, மகன் பிரகாஷை அழைத்து கொண்டு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வைதேகி

கடலுார் : தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற பள்ளி மாணவர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

கடலுார் குண்டு உப்பலவாடியைச் சேர்ந்தவர் பன்னீர். இவரது மனைவி வைதேகி. இவர்களது மகன் பிரகாஷ், 12; கடலுார் மஞ்சக்குப்பம் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்தார். நேற்று காலை கடலுார் முதுநகரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக, மகன் பிரகாஷை அழைத்து கொண்டு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வைதேகி சென்றார்.

அவர்களுடன் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவரும் சென்றார்.நிகழ்ச்சி முடிந்து கடலுார் நோக்கி வந்தனர். முதுநகர் மணிகூண்டு பஸ் நிறுத்தம் அருகே, பின்னால் வந்த டிப்பர் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுவன் பிரகாஷ், கீழே விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தனது கண் முன் மகன் துடிதுடித்து இறந்ததை பார்த்த தாய் கதறி அழுதார்.கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X