திருவந்திபுரம் கோவிலில் போக்குவரத்து நெரிசல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவந்திபுரம் கோவிலில் போக்குவரத்து நெரிசல்

Added : செப் 10, 2021
Share
கடலுார் : கடலுார் திருவந்திபுரம் கோவில் மற்றும் மண்டபங்களில் 150க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் கடும் போக்குவரத்து நிலவியது.கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிறுக் கிழமைகளில் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேப் போல கோவிலுக்குள் திருமணங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு பெரும்பாலான

கடலுார் : கடலுார் திருவந்திபுரம் கோவில் மற்றும் மண்டபங்களில் 150க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் கடும் போக்குவரத்து நிலவியது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிறுக் கிழமைகளில் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேப் போல கோவிலுக்குள் திருமணங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு பெரும்பாலான மக்கள் கோவில்களில் எளிய முறையில் திருமணங்கள் நடத்தவே விரும்புகின்றனர்.

பின், வசதிக்கேற்ப திருமண மண்டபங்களில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திக்கொள்கின்றனர்.நேற்று முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமண ஜோடிகள் திருவந்திபுரம் கோவில் வளாகத்தில் குவிந்தனர். அதிகாலை முதல் கோவில் வளாகத்திற்கு வெளியேவும், அப்பகுதியை சுற்றியுள்ள திருமண மண்டபங்களிலும் 150க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. இதனால் திருவந்திபுரம் சாலை கடும் வாகன நெரிசலினால் பாதிக்கப்பட்டது. இது இரவு வரை நீடித்ததால் பொது மக்கள் அவதியடைந்தனர்.இது குறித்து கோவில் செயல் அலுவலர் கூறுகையில்,'கொரோனா பரவலை தொடர்ந்து கோவில் வளாகத்தில் திருமணம் செய்ய யாரிடமும் கட்டணம் வசூலிப்பதில்லை. சாலையில் நடக்கும் திருமணங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X