சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டவர் அமைக்க இடம் கேட்டு பெண்ணிடம் நுாதன மோசடி

Added : செப் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், மொபைல் டவருக்கு இடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறி, பெண்ணிடம் 1.77 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி ராணி,49; இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் நிலம் உள்ளது. இவரை கடந்த மாதம் தனியார் நிறுவனம் ஒன்று அணுகி, உங்கள் நிலத்தில்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், மொபைல் டவருக்கு இடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறி, பெண்ணிடம் 1.77 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி ராணி,49; இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் நிலம் உள்ளது. இவரை கடந்த மாதம் தனியார் நிறுவனம் ஒன்று அணுகி, உங்கள் நிலத்தில் மொபைல் டவர் அமைக்க எங்கள் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தால் 30 லட்சம் ரூபாய் வரை முன்பணம் தருவதாகவும், மாத வாடகையாக 25 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளனர்.

மேலும், ராணியை, கவிதா என்ற பெண் மொபைலில் தொடர்பு கொண்டு தான், அரியானாவில் உள்ள மொபைல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, நம்ப வைத்து ராணியிடம் இருந்து பட்டா எண், ஆதார், வங்கி கணக்கு எண் விபரங்களை பெற்று கொண்டார்.வக்கீலுக்கு வழங்க வேண்டிய கட்டணம், வரி செலுத்த வேண்டும் என கூறி ராணியிடம் இருந்து ஆக., 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை அவரது வங்கி கணக்கு மூலம் 3 தவணையாக மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 770 ரூபாயை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.

ராணி, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், போலீசார் பணத்தை ஏமாற்றிய நபர்கள் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X