பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ம் தேதி தடுப்பூசி முகாம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் பொருட்டு வரும் 12ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திகுறிப்பு;கொரோனா தொற்று தடுப்புக்கு தடுப்பூசி மட்டுமே சிறந்து விளங்குகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள்,

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் பொருட்டு வரும் 12ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திகுறிப்பு;கொரோனா தொற்று தடுப்புக்கு தடுப்பூசி மட்டுமே சிறந்து விளங்குகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரி மருத்துவ உட்பட 50 இடங்களில் கடந்த ஜன., 16 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை முதல் தவணையாக 4 லட்சத்து 41 ஆயிரத்து 688 பேருக்கும், இரண்டாம் தவணையாக 85 ஆயிரத்து 373 பேர் என மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 61 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் வரும் 12 ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 600 மையங்கள் மூலம் 76,374 தடுப்பூசி போடப்படவுள்ளது. தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X