பேராசிரியர் வீட்டில் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேராசிரியர் வீட்டில் திருட்டு

Added : செப் 10, 2021
Share
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் பேராசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கம், பணம் திருடுபோனது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி,46; சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லுாரி பேராசிரியர். இவர் சென்னையில் வசிப்பதால் வீட்டை அருகிலுள்ள தமிழரசன் என்பவர் பார்த்து

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் பேராசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கம், பணம் திருடுபோனது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி,46; சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லுாரி பேராசிரியர். இவர் சென்னையில் வசிப்பதால் வீட்டை அருகிலுள்ள தமிழரசன் என்பவர் பார்த்து வந்தார். நேற்று காலை 9:00 மணிக்கு பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரத்து 300 திருடு போயிருந்தது.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும். செல்வமணி கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் ஆகியோர் வழக்கு பதிந்து தடயங்களை சேகரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X