சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல பெண்களுடன் திருமணம்; 'கல்யாண மன்னனுக்கு' வலை

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
தாம்பரம்--தன் நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவான கணவர், தனக்கு முன், மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக, தாம்பரம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்தவர், வாணி, 39. இவர், தற்போது நெசப்பாக்கம், மாரியம்மன் கோவில் குறுக்கு தெருவில், வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம்

தாம்பரம்--தன் நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவான கணவர், தனக்கு முன், மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக, தாம்பரம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.latest tamil newsதாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்தவர், வாணி, 39. இவர், தற்போது நெசப்பாக்கம், மாரியம்மன் கோவில் குறுக்கு தெருவில், வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அளித்துள்ள புகார் மனு:

திருமண வரன் பார்க்கும், தனியார் இணையதளம் வாயிலாக, பிரேம் ராஜ் என்பவர், கடந்தாண்டு எனக்கு அறிமுகமானார். வடபழனியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில், 2020, அக்.,29ல் எனக்கும், அவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது, 30 சவரன் நகைகள், என் பெற்றோர் அணிவித்தனர்.ஜனவரி 2021ல், திருமண வரவேற்பு வைத்து கொள்ளலாம் எனக்கூறிய பிரேம்ராஜ், தெற்கு ரயில்வே ஒப்பந்த பணிகளில், பணம் வரவில்லை எனக்கூறி, திருமணமான சில நாட்களிலேயே, எனது, 30 சவரன் நகைகளை வாங்கி கொண்டார்.பின், என்னை மிரட்டி, ஆதார் கார்டு மற்றும் கையெழுத்தை பெற்று, வங்கிகள் மற்றும் கடன் தரும் நிறுவனங்கள் வாயிலாக, 20 லட்சம் ரூபாயும், என் நண்பர்களிடம், 5 லட்சம் ரூபாயையும், என் பெயரில் கடனாக பெற்றார்.அவர், என்னைப் போலவே, மூன்று பெண்களை திருமணம் செய்து, ஏமாற்றியுள்ளார்.


latest tamil newsநான் காவல் நிலையத்தில், புகார் அளிக்க வருவதை, வழக்கறிஞர் வாயிலாக அறிந்து, மும்பைக்கு தப்பிச் சென்றார்.அவர் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அவர் வாங்கிய கடன்களில் இருந்து, என்னை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.புகாரை பெற்ற போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தில், பிரேம்ராஜை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள், மும்பை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-202121:17:43 IST Report Abuse
அப்புசாமி இதெல்லாம் ஃபேஸ்புக், வாட்சப் காதல் திருமணங்களாக இருக்கும். ஆயி, அப்பன், மாமன், மச்சான், அக்கா, தங்கை இல்லாதவன்னு சொல்லிக்கிட்டு வர்ரவனை நம்பி பழகாதீங்க.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
10-செப்-202120:46:05 IST Report Abuse
தஞ்சை மன்னர் இங்க ஒருத்தன் குடும்பமும் இல்லாமல் குட்டியும் இல்லாமல் நாட்டை சீரழிக்கிறார் அதற்க்கு எங்கே புகார் கொடுக்கவேணும் ஆபிசர்
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
10-செப்-202120:40:12 IST Report Abuse
radha ஏனுங்க கல்யாண மன்னனா இல்ல பாலியல் ஜல்ஜா கட்சி கல்யாண ராமனா. நல்லா விசாரிங்க ஆபிசர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X