சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு

Added : செப் 10, 2021
Share
கோபி: கோபியில் சாலையோர வியாபாரிகளுக்கு, அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்படம் எடுக்கும் பணி வரும் 13ல் நடக்கிறது. கோபி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபார சான்று வழங்கப்பட வுள்ளது. இதற்காக புகைப்படம் எடுக்கும் பணி, செப்.,13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள், காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை, கோபி தினசரி மார்க்கெட் அருகேயுள்ள

கோபி: கோபியில் சாலையோர வியாபாரிகளுக்கு, அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்படம் எடுக்கும் பணி வரும் 13ல் நடக்கிறது. கோபி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபார சான்று வழங்கப்பட வுள்ளது. இதற்காக புகைப்படம் எடுக்கும் பணி, செப்.,13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள், காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை, கோபி தினசரி மார்க்கெட் அருகேயுள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடக்கிறது. சாலையோர வியாபாரிகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி பாஸ்புக், பாஸ்போட் சைஸ் போட்டோ ஒன்று மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை சாலையோர வியாபாரிகள் தவறாமல் பயன்படுத்தி கொள்ள, கோபி நகராட்சி கமிஷனர் பிரேம் ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X