பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா: போலீசார் தீவிர கண்காணிப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: ''விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது. சிலைகளை ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்க கூடாது. வீடுகளில் பொதுமக்கள் சிலைகள் வைத்து வழிபடலாம்,'' என, ஈரோடு எஸ்.பி., சசி மோகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட

ஈரோடு: ''விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது. சிலைகளை ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்க கூடாது. வீடுகளில் பொதுமக்கள் சிலைகள் வைத்து வழிபடலாம்,'' என, ஈரோடு எஸ்.பி., சசி மோகன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது. சிலைகளை ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்க கூடாது. வீடுகளில் பொதுமக்கள் சிலைகள் வைத்து வழிபடலாம் என அரசு வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பொது இடங்களில் எங்கேயாவது விநாயகர் சிலைகள் வைக்க படுகிறதா என்பது குறித்து போலீசார் கண்காணிப்பர். இது குறித்து ஏற்கனவே கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அரசு உத்தரவை மீறி யாராவது, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபராக சென்று சிலைகளை கரைக்கலாம். அப்படி இயலாதவர்கள் குறிப்பிட்ட சில கோவில்களில் சிலைகளை வைத்தால், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளே அந்த சிலைகளை எடுத்து கரைத்து விடுவர். பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள விதிமுறைப்படி வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X