பொது செய்தி

தமிழ்நாடு

கருங்கல்பாளையம் சந்தையில் கால்நடை விற்பனை மந்தம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டது. கடந்த, 2ல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை மீண்டும் செயல்படத் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம் கூடிய சந்தையில் கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் யாரும் வராததால்

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டது. கடந்த, 2ல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை மீண்டும் செயல்படத் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம் கூடிய சந்தையில் கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் யாரும் வராததால் விற்பனை மந்தமாக நடந்தது. நேற்று இரண்டாவது வாரமாக கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை கூடியது. வழக்கமாக ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வருவர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், மாடுகளை வாங்கி செல்வர். ஆனால், கொரோனா பீதி காரணமாக குறைந்த அளவு வியாபாரிகளே வந்தனர். வழக்கமான விற்பனையில் பாதி அளவு கூட நடக்க வில்லை. குறிப்பாக கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வராததால் சந்தை வெறிச்சோடியது. மாடுகள், 15 ஆயிரம் ரூபாய் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X