சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தின்னுட்டுப்போன யானைகள்; தூங்கி எழுந்து வந்த ஊழியர்கள்: சிறைபிடித்து விவசாயிகள் கடும் வாக்குவாதம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அருகே யானைகள் அட்டகாசத்தால், ஆவேசமடைந்த விவசாயிகள், வனத்துறை ஊழியர்களை சிறைபிடித்தனர்.பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள், புதுபீர்க்கடவு, காராச்சிக்கொரை உள்ளிட்ட கிராமங்களில் முகாமிட்டு, வாழை, கரும்பு பயிர்களை நாசம் செய்து வருகின்றன. குறிப்பாக பத்து நாட்களாக புதுபீர்க்கடவு கிராமங்களில் அட்டகாசம் செய்கின்றன.

பவானிசாகர்: பவானிசாகர் அருகே யானைகள் அட்டகாசத்தால், ஆவேசமடைந்த விவசாயிகள், வனத்துறை ஊழியர்களை சிறைபிடித்தனர்.


பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள், புதுபீர்க்கடவு, காராச்சிக்கொரை உள்ளிட்ட கிராமங்களில் முகாமிட்டு, வாழை, கரும்பு பயிர்களை நாசம் செய்து வருகின்றன. குறிப்பாக பத்து நாட்களாக புதுபீர்க்கடவு கிராமங்களில் அட்டகாசம் செய்கின்றன. வனக்குழுவினர் விரட்டினாலும் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு புதுபீர்க்கடவு கிராமத்துக்குள் புகுந்த யானைகள், விவசாயி மூர்த்தி தோட்டத்தில், 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. நிலத்தை சுற்றி அமைத்த முள்கம்பி வேலியையும் உடைத்து வீசின. விவசாயிகள் பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்ட முடியவில்லை. விவசாயிகள் தகவல் தந்தும் வனத்துறையினர் வரவில்லை. இந்நிலையில் யானைகளை விரட்ட நேற்று காலை, 9:?? மணிக்கு வன ஊழியர்கள் மூவர் சாவகாசமாக வந்தனர். ஆவேசமடைந்த விவசாயிகள் அவர்களை சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ்சையும் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X