பொது செய்தி

தமிழ்நாடு

தாரமங்கலத்துடன் ஆரூர்பட்டியை இணைக்க எதிர்ப்பு: மக்கள் முற்றுகையால் தீர்மானம் நிறைவேற்றம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஓமலூர்: தாரமங்கலம் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதால், அதில் ஆரூர்பட்டி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் முற்றுகையிட்டதால், சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சேலம் மாவட்டத்தில், தாரமங்கலம், இடங்கணசாலை பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 7ல், கலெக்டர் கார்மேகம் தலைமையில், கருத்து

ஓமலூர்: தாரமங்கலம் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதால், அதில் ஆரூர்பட்டி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் முற்றுகையிட்டதால், சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சேலம் மாவட்டத்தில், தாரமங்கலம், இடங்கணசாலை பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 7ல், கலெக்டர் கார்மேகம் தலைமையில், கருத்து கேட்பு கூட்டம் தாரமங்கலத்தில் நடந்தது. அதில், தாரமங்கலத்துடன் ஆரூர்பட்டி, குறுக்குபட்டி, துட்டம்பட்டி ஆகிய பகுதிகளை இணைத்து, தாரமங்கலம் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் ஆரூர்பட்டி மக்கள் இணைந்து, நேற்று, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 'இப்பகுதியில் விவசாயத்தை தவிர வேறு தொழில் இல்லை. விவசாய நிலம் என்பதால், நகராட்சியுடன் இணைக்க வேண்டாம்' என சிறப்பு தீர்மானம் போட வலியுறுத்தினர். உடனே ஊராட்சி தலைவர் வீரம்மாள் தலைமையில், சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு, மக்களின் கோரிக்கைப்படி, தீர்மானம் நிறைவேற்றினர். பின், மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X